சீதக்காதி: விஜய் சேதுபதி – 25

தமிழக அரசியல்: கமல் புதிய அறிவிப்பு?

விஜய் சேதுபதி படத்தில் ரம்யா கிருஷ்ணன்

மா: லக்‌ஷ்மி இயக்குனரின் அடுத்த குறும்படம்

விஜய் சேதுபதி திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான திரைப்படம் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’. பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம், தமிழ் சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் விஜய் சேதுபதி பேசிய வசனங்கள் எல்லாம் மிகவும் பிரபலம். என்னாச்சு, ப்பா.. யார்டா இந்தப் பொண்ணு பேய் மாதிரி மேக்கப் போட்டிருக்கு, இப்படியான சிறு சிறு வசனங்களை கூட ரசிக்கும் விதமாக பேசியிருப்பார். இந்நிலையில் அவரது 25-ஆவது படத்தை, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ பாலாஜி இயக்கியுள்ளார். ‘சீதக்காதி’ என பெயரிடப்பட்ட இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், விஜய் சேதுபதி பிறந்தநாளான இன்று (ஜனவரி 16) வெளியாகியுள்ளது.

‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்துக்கு பிறகு மிகவும் வயதான கதாபாத்திரம் ஏற்று இதில் நடிக்கிறார். இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், தமிழ் சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*