கலாம் போல கனவுகள் கொண்டவன் நான்: கமல்ஹாசன்

பிப்ரவரி 21 அன்று தமிழகம் முழுவதுமான பயணத்தை கமல் துவங்குகிறார். அவர் பிறந்த மாவட்டமான இராமநாதபுரத்தில் இருந்தே இந்தப் பயணம் ஆரம்பமாகிறது. கட்சியின் பெயரை அங்கே அறிவித்த பின்பு மதுரை, சிவகங்கை மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு முதற்கட்ட பயணத்தை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் அவர் இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து தன் பயணத்தை துவங்க முடிவு செய்திருக்கிறார்.

இதுகுறித்து கமல், “கலாமிற்கு பல கனவுகள் இருந்தன. அவரை போல பல கனவுகள் கொண்டவன் நான். விமர்சிப்பது மட்டும் என் வேலையன்று. நான் இறங்கி வேலை செய்ய வந்தவன்” என்று தெரிவித்தார்.

மேலும் அவர், “திராவிடம் என்பது தமிழ்நாடு தழுவியது மட்டுமல்ல. அது நாடு தழுவியது. மிகப்பெரிய சரித்திரமும், மானுடவியலும், தொல்பொருள் ஆராய்ச்சியும் திராவிடத்தில் உள்ளது” என்றும் பேசினார்.

ஊடகவியலாளர்களுக்கான புதிய அமைப்பு ‘குரல்’ …!

அய்சா: ரோஹித் வெமுலாவின் போராட்டத்தை வலுப்படுத்துவோம்

அய்சா: ஆதார் இணைப்பை உடைக்கும் போராட்டம்

பாலியல் கொடுமைகள் :இந்தியா வரும் அமெரிக்க பயணிகளுக்கு எச்சரிக்கை…!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*