வைரமுத்து மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஒரு முகாந்திரமும் இல்லை: சென்னை உயர்நீதிமன்றம்…!

ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது.  வைரமுத்துவின்  கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இவரது கருத்தைகண்டித்து இந்து அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின.  இந்து அமைப்புகளின் தலைவர்கள், பாஜக நிர்வாகிகள் வைரமுத்துவுக்கு எதிராக கடும் கண்டங்களை தெரிவித்தனர்.  கவிஞர் வைரமுத்துக்கு ஆதரவாக நேற்று இயக்குனர் பாரதிராஜா குரல் கொடுத்தார். தமிழகத்தில் பல இடங்களில் வைரமுத்து மீது போலிசில் புகார் அளிக்கப்பட்டது. கொளத்தூர் காவல்நிலையத்தில் முருகானந்தம் என்பவர் வைரமுத்து மீது புகார் அளித்தார்.இந்நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வைரமுத்து மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் வைரமுத்து மீதான குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை. காவல்துறை தரப்பில் பதிலளிக்க அவகாசம் கோரியதையடுத்து  கவிஞர் வைரமுத்து மனு விசாரணை மீது பிற்பகல் 2.15-க்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*