அமைதிப்படை அமாவாசை பன்னீர் :சரஸ்வதி விமர்சனம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் தினகரன் அணி சார்பில் எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் தினகரன் அணியின் கொள்கை பரப்பு செயலாளர் சி.ஆர்.சரசுவதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

பதவி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் அணியை சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்களின் வழக்கு விரைவில் முடிவுக்கு வந்து விடும். இன்னும் 15 நாளில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அதன்பின்னர் மக்கள் ஆதரவோடு தினகரன் முதல்-அமைச்சராவார்.தற்போது எடப்பாடியும், ஓ.பன்னீர்செல்வமும் திறமையற்றவர்களாக இருக்கிறார்கள்.அமைதிப்படை சினிமா படத்தில் வரும் சத்யராஜ் போல் நடித்து அரசியலுக்கு வந்தவர் ஓ.பி.எஸ். ஜெயலலிதாவுக்கு அவர் நம்பிக்கை துரோகம் செய்தவர்.டி.டி.வி.தினகரனுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு உள்ளது. ஆர்.கே.நகர் தேர்தலில் பெற்ற வெற்றியே இதற்கு உதாரணம்.இனி அ.தி.மு.க.வை வழிநடத்த தினகரனால் மட்டுமே முடியும். ஜெயலலிதாவின் அடுத்த வாரிசாக அவர் விளங்கி வருகிறார்.தற்போது தமிழகத்தில் பஸ் கட்டணத்தை எடப்பாடி அரசு உயர்த்தியுள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மக்களை பற்றி கவலைப்படாமல் தனியார் பஸ்கள் உரிமையாளர்களுக்காக கட்டணத்தை உயர்த்தியுள்ளார்கள்.இவ்வாறு அவர் பேசினார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*