மோடி அகந்தையில் இருக்கிறார்: அன்னா ஹசாரே

வேலூரில் ஆளுநருக்குக் கருப்புக் கொடி காட்டிய திமுக..!

தகுதி நீக்கம்: நீதிமன்றத்தை நாட ஆம் ஆத்மி முடிவு..!

ஊழலுக்கு எதிராக போராடி வரும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, மோடி அகந்தையில் இருக்கிறார். இதன் காரணமாகவே எனது கடிதங்களுக்கு பதில் அளிப்பதில்லை என தெரிவித்துள்ளார்.

மராட்டிய மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அன்னா ஹசாரே, ”லோக்பால் நடைமுறை, லோக்அயுக்தா நியமனம், விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரம் பென்ஷன் மற்றும் விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 3 ஆண்டுகளில் 30-க்கும் அதிகமான கடிதங்களை பிரதமர் மோடிக்கு அனுப்பினேன். ஆனால், அவர் ஒருபோதும் பதில் அளிக்கவில்லை. பிரதமர் மோடி அகந்தையில் இருக்கிறார். இதன் காரணமாகவே, எனது கடிதங்களுக்கு அவர் பதில் அளிப்பதில்லை” என்று தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*