மறியல், சிறை நிரப்பும் போராட்டம்: எடப்பாடி அரசுக்கு முக.ஸ்டாலின் எச்சரிக்கை

மோடி ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம்: டிரெண்டிங் ஆகும் #ineedajob

பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெறாவிட்டால் வருகிற 27-ஆம் தேதியுடன் திமுக போராட்டம் நின்றுவிடாது. மறியல், சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவோம் என்று முக. ஸ்டாலின் எச்சரித்துள்ளார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் அதிமுக பொறுப்பாளர் எஸ்.கே.பி சீனிவாசன் தலைமையில் 1700 பேரும், காஞ்சிபுரம் நகர புரட்சி பாரதம் கட்சியின் செயலாளர் பி.சேகர் தலைமையில் 400 பேரும் நேற்று மாலை அண்ணா அறிவாலயம் வந்தனர். திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான முக.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அவர்களை ஸ்டாலின் வரவேற்றார். பின்னர் அவர் பேசியதாவது: நீங்கள் இந்த இயக்கத்தில் இணைந்து கொள்ள மட்டுமின்றி பிணைந்து கொள்ளவும் வந்துள்ளீர்கள். உங்களை திமுக தலைமை சார்பில் வருக வருக என வரவேற்கிறேன். இந்த இயக்கத்தை உருவாக்கியது பதவிக்கு வருவதற்காக இல்லை, மக்களுக்கு தொண்டாற்ற தான் என்று அண்ணா கூறியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தால் மக்கள் முன்னேற்றதிற்கான சாதனைகளை படைக்க அந்த பதவியை பயன்படுத்திக் கொள்வோம் என்று அண்ணா கூறினார்.

அப்படிப்பட்ட திமுகவை யார் யாரோ சதிவலை பின்னி அழிக்க முயல்கிறார்கள். இந்த இயக்கம் தமிழ்நாட்டில் இருந்தால் நம் எண்ணம் ஈடேறாது நமது சதியை செயல்படுத்த முடியாது என்று திராவிட இயக்கத்தை ஒழிக்க முயற்சிக்கிறார்கள். நான் அவர்களுக்கு செல்வேன் எந்த சக்தியாலும் எப்படிப்பட்ட தீய சக்தியாலும் எந்த கொம்பனாலும் இந்த இயக்கத்தை அழிக்க முடியாது. ஏன் என்றால் இந்த இயக்கத்திற்கு தனி வரலாறு, தனி சகாப்தம் உண்டு. அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போய் இருக்கிறார்கள். திமுக அழிந்ததாக வரலாறு இல்லை திமுக இப்போது ஆளுங்கட்சி இல்லை ஆனால் விரைவில் ஆளும் கட்சியாக ஆக போகும் கட்சி. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இரண்டையும் ஒன்றாக கருதி நாட்டுக்கு உழைக்கும் இயக்கம். 18 அதிமுக எம்.எல்.ஏகள் பதவி பறித்த வழக்கு விசாரணை முடிந்து விரைவில் தீர்ப்பு வர உள்ளது. நாம் எதிர்பார்க்கும் தீர்ப்பு தான் ஒரு வாரத்தில் வர உள்ளது. நான் ஜோசியம் கூறவில்லை. அரசியல் சட்டம் தெரிந்தவர்களுக்கு இது தெரியும் மாத கணக்கில் அல்ல வார கணக்கில் அல்ல நாள் கணக்கில் இந்த ஆட்சி அப்புறப்படுத்தப்பட இருக்கிறது.

வருகிற 27-ஆம் தேதி நாடு முழுவதும் மிகப்பெரிய போராட்டம் நடத்த உள்ளோம். அதற்கு காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், முஸ்லீம் லீக் மனித நேய மக்கள் கட்சி போன்ற கட்சிகள் ஆதரவு தந்துள்ளனர். பஸ் கட்டணம் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு ஒரேநாளில் உயர்த்தப்பட்டுள்ளது. மக்களுக்கு பணியாற்றுவதற்காகவே போக்குவரத்து துறை அதில் எவ்வளவு இழப்பு, நஷ்டம் ஏற்பட்டாலும் அதை பற்றி கவலை படக்கூடாது. பஸ் கட்டண உயர்வை உடனே திரும்ப பெறாவிட்டால் வருகிற 27-ஆம் தேதியுடன் திமுக போராட்டம் நின்று விடாது அதற்கு பிறகு மறியல், சிறை நிரப்பும் போராட்டம் என்று தொடரும் அதில் பங்கேற்க நீங்கள் தயாராக இருக்க வேண்டும். முன்னதாக மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ., சந்தோஷ்குமார்(அதிமுக), பாபு(புரட்சி பாரதம் ) ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.பாரதி எம்.பி, எம்.எல்.ஏக்கள் கு.க.செல்வம், எழிலரசன், புகழேந்தி, ஆர்.டி.அரசு மற்றும் துறைமுகம் காஜா, பூச்சி முருகன் சன்-பிராண்ட் ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நீதிபதி லோயா வழக்கு: உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றம்?

 வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியல்: இந்தியா பின்னடைவு?

மோடி அகந்தையில் இருக்கிறார்: அன்னா ஹசாரே

வேலூரில் ஆளுநருக்குக் கருப்புக் கொடி காட்டிய திமுக..!

தகுதி நீக்கம்: நீதிமன்றத்தை நாட ஆம் ஆத்மி முடிவு..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*