அசாமில் மோதல் :இருவர் பலி..!

நாகா இன மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளை ஒருங்கிணைத்து கிரேட்டர் நாகலிம் உருவாக்க வேண்டும் என நாகலாந்து தேசிய சோசலிச கவுன்சில் (ஐஎம்) வலியுறுத்தி வருகிறது. இந்த கிரேட்டர் நாகலிம் பகுதியில், மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் மற்றும் அசாமில் நாகா மக்கள் வசிக்கும் பகுதிகளையும் கிரேட்டர் நாகலிம் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், நாகாலாந்து அமைதி நடவடிக்கைகளுக்கான வரைவு தீர்வு ஒன்றை ஆர்.எஸ்.எஸ். தலைவர் வரைவு திட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு அளித்திருப்பதாகவும், அதில் அசாம் மாநிலத்தின் மலை மாவட்டமான டிமா ஹாசோவின் சில பகுதிகளை கிரேட்டர் நாகலிம் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என பரிந்துரை செய்திருப்பதாகவும் தகவல் வெளியானது. இதனை ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் மறுத்துள்ளனர். இருப்பினும் டிமா ஹாசோ மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் டிமா ஹாசோ மாவட்டத்தில் நேற்று பந்த் நடைபெற்றது. வன்முறை வெடிக்கலாம் என்பதால் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இதனையும் மீறி ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. மைபாங் பகுதியில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரெயிலை நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டனர்.

போராட்டக்காரர்களை ஒடுக்க போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர். இதனால் டிமா ஹாசோ மாவட்டத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவிவருகிறது. பதற்றத்தை தணிக்க கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

எங்களுக்கு வேலை வேண்டும், உங்கள் பக்கோடா சூத்திரமல்ல: மோடிக்கு அய்சா

பள்ளிக்குழந்தைகளை வெறிகொண்டு தாக்கிய இந்து வெறியர்கள்…!video

சங்கரமடத்திற்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு..!

நாளை நமதே: அரசியல் பயணத்துக்கு கமல் வைத்த பெயர்

காஞ்சி சங்கராச்சாரியார் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கவேண்டும்:கி.வீரமணி கோரிக்கை..!

தமிழ்த் தாய் வாழ்த்தின் போது தியானம்: சங்கர மடம் விளக்கம்

பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு: மக்கள் அதிர்ச்சி

மோடி ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம்: டிரெண்டிங் ஆகும் #ineedajob

மறியல், சிறை நிரப்பும் போராட்டம்: எடப்பாடி அரசுக்கு முக.ஸ்டாலின் எச்சரிக்கை

அமைதிப்படை அமாவாசை பன்னீர் :சரஸ்வதி விமர்சனம்

நீதிபதி லோயா வழக்கு: உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றம்?

 வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியல்: இந்தியா பின்னடைவு?

மோடி அகந்தையில் இருக்கிறார்: அன்னா ஹசாரே

வேலூரில் ஆளுநருக்குக் கருப்புக் கொடி காட்டிய திமுக..!

தகுதி நீக்கம்: நீதிமன்றத்தை நாட ஆம் ஆத்மி முடிவு..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*