காவிரி நதிநீர் பிரச்சனை: பிப்ரவரி 23-க்கு முன் இறுதி தீர்ப்பு?

காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பான வழக்கில் பிப்ரவரி 23-ஆம் தேதிக்கு முன் இறுதி தீர்ப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. காவிரி நடுவர்மன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர் .கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகள் அமித்வா ராய், ஏஎம்.கன்வீல்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பை தேதி குறிப்பிடமால் ஒத்திவைத்துள்ளது.

இந்நிலையில் நீதிபதி அமித்வா ராய் வருகிற மார்ச் 1-ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். மேலும் பிப்ரவரி 24-ஆம் தேதியில் இருந்து மார்ச் 5-ஆம் தேதி வரையிலும் உச்சநீதிமன்றத்திற்கு ஹோலி விடுமுறையாகும். எனவே பிப்ரவரி 23 அல்லது அதற்கு முன்பாக காவிரி நதிநீர் பிரச்சனையின் இறுதி தீர்ப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*