சிங்கப்பூர்: கஜோலுக்கு மெழுகு சிலை

பாலிவுட்டின் பிரபல நடிகையான கஜோலுக்கு சிங்கப்பூரில் உள்ள மேடம் டுசாட் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக இந்த குழுவைச் சேர்ந்தவர்கள், மும்பை வந்து கஜோலின் முகத்தோற்றம், கண், முடி உள்ளிட்டவைகளை அளவிட்டுச் சென்று உள்ளனர். மேடம் டுசாட் அருங்காட்சியகத்துக்கு பல்வேறு நாடுகளிலும் கிளை இருக்கிறது. பல்வேறு துறைகளில் சாதித்த பிரபலங்களின் மெழுகு சிலைகள் இங்கே வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் தற்போது கஜோல் இணைந்திருக்கிறார்.

இதுகுறித்து கஜோல், “என் மெழுகுச் சிலையை காண ஆவலாக உள்ளேன். என் சிலையை உருவாக்க தேவையான அளவீடுகளை சுமார் 4 மணிநேரம் செலவிட்டு எடுத்து சென்றனர். சிலை உருவாக்கப் பணிகள் முடிந்து, சிங்கப்பூரில் என் சிலை வைக்கப்படும் நாளை எண்ணி காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*