இம்சை அரசன் 24-ஆம் புலிக்கேசி: பிரச்சனையில் சிக்கிய வடிவேலு

சிம்பு தேவன் இயக்கத்தில் வடிவேலு கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் ‘இம்சை அரசன் 23-ஆம் புலிக்கேசி’. மாபெரும் வெற்றியடைந்த இந்தப் படத்தை இயக்குனர் ஷங்கர் தயாரித்திருந்தார். இதன் இரண்டாம் பாகமான ‘இம்சை அரசன் 24-ஆம் புலிக்கேசி’ படத்தை எடுக்க சிம்பு தேவன் முடிவு செய்தார். அதனையும் ஷங்கர் தயாரிக்க ஒப்புக் கொண்டார். இதன் பூஜை முடிந்து படத்துக்கான ஷெட் போடப்பட்ட சில நாளில், வடிவேலு சில தொழில்நுட்ப கலைஞர்களையும் நடிகர்களையும் மாற்ற சொல்லியிருக்கிறார். இதற்கு தயாரிப்பு தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கவே, படப்பிடிப்பில் இருந்து வடிவேலு விலகிவிட்டார். ஷங்கர் தரப்பில் வடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. வடிவேலு படத்தை முடித்துக் கொடுக்க வேண்டும் அல்லது நஷ்டஈடு வழங்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் கூறியிருக்கிறது.
இந்நிலையில் ஜீவி பிரகாஷ் மற்றும் ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் படத்தில் வடிவேலுவை புக் செய்திருந்த தயாரிப்பாளர்களும் அவரிடம் முன் பணத்தை திரும்ப கேட்கின்றனர். இதனால் வடிவேலு சிக்கலில் இருக்கிறார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*