சசிகலாவின் 4,500 கோடி சொத்து: வருமானவரித்துறை கையகப்படுத்த திட்டம்

சசிகலா சொத்துக்களை பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. ஐடி ரெய்டில் சசிகலா அறையில் இருந்து பென் டிரைவ், லேப்டாப் கைப்பற்றப்பட்டது. சசிக்கு ரூ.4500 கோடி மதிப்புக்கு பினாமி சொத்து உள்ளது பென் டிரைவ் மூலம் அம்பலம் ஆகியுள்ளது. ரூ.4500 கோடி சொத்து குறித்து 3 மாதத்தில் விளக்கம் தர வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சரியான விளக்கம் அளிக்காவிட்டால் பினாமி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

முறைகேடாக சொத்து சேர்த்தது நிரூபணமானால் 7 ஆண்டு வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகலா, தினகரன் ஆகியோரது உறவினர் வீடுகளில் சில மாதங்களுக்கு முன் 187 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*