விஜய் வீட்டில் கீர்த்தி சுரேஷ் ஓவியம்: பல கோடி ரசிகைகளில் ஒருத்தி

சிங்கப்பூர்: கஜோலுக்கு மெழுகு சிலை

பார்த்திபன் மகளுக்கு திருமணம்

இந்தியன் 2: கமல் – நயன்தாரா கூட்டணி?

நடிகர் பார்த்திபன் தன் மகள் கீர்த்தனாவின் திருமணத்தை முன்னிட்டு அனைத்து திரையுலக பிரபலங்களுக்கும் பத்திரிகை வைத்து வருகிறார். விஜய் வீட்டில் பத்திரிகை வைத்துவிட்டு, அவருடன் செல்ஃபி எடுத்து தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் விஜய்க்கு பின்புறம், கீர்த்தி சுரேஷ் பரிசளித்த ஓவியம் இருப்பதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்த சந்திப்பு குறித்து பார்த்திபன், “உயரம் எப்படி ஆழத்தில்? அலைகள் கடந்த கடலின் ஆழத்தில்..! அமைதியாய்…அந்த உயர் நட்சத்திரம். சிரிப்பில் கூட இதயம் விஜயம்! மகனின் பெருமை பூரிப்பாக, ஆத்ம த்ருப்தி இசையாக-அவர் தாய்!” என பதிவிட்டுள்ளார்.

விஜய்யின் பின்னால் உள்ள ஓவியம், கடந்த விஜய் பிறந்தநாள் (2017, சூன் 22) அன்று கீர்த்தி சுரேஷ் அவருக்கு பரிசளித்தது குறிப்பிடத்தக்கது. இதில், “என்றென்றும் வெற்றி தொடரட்டும்… பல கோடி ரசிகைகளில் ஒருத்தி” என குறிப்பிட்டிருந்தார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*