வடமாநில இடைத்தேர்தல்கள்:பாஜகவுக்கு பின்னடைவு..!

ராஜஸ்தான் மாநிலத்தில் இரு மக்களவை தொகுதிகளில் காங்கிரஸூம், மேற்குவங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸூம் முன்னிலை வகிக்கின்றன.

ராஜஸ்தான் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் காலியாக உள்ள மக்களவை, சட்டப்பேரவை தொகுதிளுக்கு ஜனவரி 29ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. ராஜஸ்தான் மாநிலம் அல்வார், அஜ்மீர் மக்களவை தொகுதிகளில் எதிர்கட்சியான காங்கிரஸ் முன்னணியில் உள்ளது. மண்டல்கர் சட்டப்பேரவை தொகுதியில் ஆளும் பாஜக முன்னணி வகிக்கிறது.

ராஜஸ்தானில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த இடைத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அங்கு பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் ரஜபுத் சமூக மக்கள் அக்கட்சிக்கு எதிராக வாக்களிக்கப்போவதாக அறிவித்தனர். அவர்களை சமதானம் செய்யும் முயற்சியில் பாஜக இறங்கியபோதிலும் பலன் கிடைக்கவில்லை.

இதுபோலவே, மேற்குவங்க மாநிலத்தில் உள்ள உல்பெரியா மக்களவை தொகுதி மற்றும் நோவாபாரா சட்டப்பேரவைத் தொகுதியில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன. இங்கு ஆளும் திரிணமூல் காங்கிரஸ் இரு தொகுதகளிலும் முன்னிலை வகிக்கிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*