மன்னிப்பு கேட்காத வைரமுத்து: மீண்டும் உண்ணாவிரதத்தை தொடர ஜீயர் ஆலோசனை

மத்திய பட்ஜெட்டில் ஆந்திரா புறக்கணிப்பு: பாஜக கூட்டணியை முறிக்க ஆலோசனை?

போக்குவரத்து தொழிலாளர்கள் 7 நாள் சம்பளம் பிடிப்பு…!

டிஜிட்டல் இந்தியா: கழிவறைக்கும் ஜிஎஸ்டி

ஆண்டாள் மீது அவதூறு தெரிவித்ததாக வைரமுத்துவை கண்டித்து உண்ணாவிரதம் மேற்கொள்வது குறித்து பக்தர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று சடகோப ராமானுஜ ஜீயர் தெரிவித்தார்.

தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டார். அப்போது ஆண்டாள் குறித்த பெருமைகளை பேசினார். வெளிநாட்டவர் ஆண்டாள் குறித்து எழுதிய கருத்தை மேற்கோள் காட்டினார். அது ஆரம்ப காலத்தில் நல்ல நடைமுறையாக இருந்தாலும் பிற்காலத்தில் தவறான அர்த்தம் கொடுத்ததால் அந்த வார்த்தையை பயன்படுத்திய வைரமுத்துவுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.

வைரமுத்து ஆண்டாள் சன்னதிக்கு வந்து மன்னிப்பு கேட்கும்வரை உண்ணாவிரதம் எடுப்பேன் என ஜீயர் அறிவித்தார். ஆனால் வைரமுத்து மன்னிப்பு கேட்கவில்லை, உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உண்ணாவிரதத்தை கெடுவிதித்து ஜீயர் கைவிட்டார். பிப்ரவரி 3-க்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால் வைரமுத்து இன்னும் மன்னிப்பு கேட்கவில்லை, எனவே உண்ணாவிரதம் மேற்கொள்வது குறித்து பக்தர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று சடகோப ராமானுஜ ஜீயர் தெரிவித்திருக்கிறார்.

குட்கா முறைகேடு: சிபிஐ விசாரணை வருமா?

எங்களுக்கு வேலை வேண்டும், உங்கள் பக்கோடா சூத்திரமல்ல: மோடிக்கு அய்சா

பாஜகவுடன் இனி எப்போதும் கூட்டணி கிடையாது: முக ஸ்டாலின்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*