கள்ளத்துப்பாக்கி வழக்கு: தேசிய அளவில் தொடர்பு?

திருச்சியில் பிடிபட்ட கள்ளத்துப்பாக்கி வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டுள்ளது. விசாரணை அதிகாரி பிரவீன் அபினவ் தலைமையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர். சென்னையில் குடியரசு தினத்தன்று கைது செய்யப்பட்ட இருவரிடம் நடத்திய விசாரணையில் திருச்சியில் போலீஸ் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவல் படி மேலும் 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களை விசாரித்ததில் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதால் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையின் போது சென்னையை சேர்ந்த போலீஸ் பரமேஸ்வரன் கடந்த 4 ஆண்டுகளாக கள்ளத்துப்பாக்கி விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொழிலதிபர்கள், வழக்கறிஞர்கள், சமூக விரோதிகள் உள்ளிட்டவர்களுக்கு அவர் கள்ளத்துப்பாக்கியை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஒட்டுமொத்தமாக சென்னை மற்றும் திருச்சி கள்ளத்துப்பாக்கி வழக்கை சிபிசிஐடி விசாரணை அதிகாரி பிரவீன் அபினவ் தலைமைக்கு மாற்றப்பட்டுள்ளது இதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் கள்ளத்துப்பாக்கி விவகாரத்தில் வேற்று மாநிலத்தவரும் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே கள்ளத்துப்பாக்கி விவகாரத்தில் தமிழகத்தில் மட்டுமல்லாது தேசிய அளவில் பல மாநிலங்களில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*