அம்மா ஸ்கூட்டர்: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

பஸ் பாஸ் கட்டண உயர்வு: 8-ஆம் தேதி அமல்?

பேருந்து கட்டண உயர்வு :திமுக இன்று அனைத்துக் கட்சி கூட்டம்..!

அம்மா மானிய ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 10-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் விண்ணப்பங்கள் பெற அரசு இலக்கு நிர்ணயித்து இருந்தது. ஒரு லட்சம் இலக்கை எட்டாததால் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வேலைக்கு செல்லும் பெண்கள் ஸ்கூட்டர் வாங்க தமிழக அரசு ரூ.25,000 மானியம் வழங்குகிறது. மானிய ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவைகளை மிகக் குறைந்த காலக் கட்டத்தில் பெற முடியாத நிலை ஏற்படுகிறது.

எனவே, விண்ணப்பிக்க விருப்பம் இருந்தும், பலர் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மானிய விலையில் இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்க பிப்.5-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. பல்வேறு நடைமுறை இடர்ப்பாடுகளால் விரும்பிய அனைவரும் விண்ணப்பிக்க முடியாததால், விண்ணப்பிக்கும் தேதியை 10-ஆம் தேதி வரை தமிழக அரசு நீட்டித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*