இந்திய சந்தையில் அனுமதியில்லா மருந்துகள் விற்பனை..!

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ராணிமேரி பல்கலைக்கழகம் மற்றும் நியூகேஸ்டில் பல்கலைக்கழக நிபுணர்கள் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் விற்பனை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.அதில் கோடிக்கணக்கான நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதில் விசே‌ஷம் என்னவென்றால் இவை மக்கள் பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கப்படாதவையாகும்.

இந்த மாத்திரைகள் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் உள்ள மல்டி நே‌ஷனல் கம்பெனிகளால் தயாரிக்கப்பட்டவை. இங்கு அவற்றை விற்க அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.118 விதமான நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 2007 முதல் 2012-ம் ஆண்டு வரை 64 சதவீத அனுமதி அளிக்கப்படாத மாத்திரைகள், சட்டவிரோதமாக விற்கப்பட்டுள்ளன.அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் அனுமதிக்கப்பட்டதில் 4 சதவீதம் மாத்திரைகள் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது என ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் மருந்தியல் குறித்த இதழில் இந்த ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. மேலும் இந்தியாவில் மருந்து விற்பனை முறைப்படுத்துதல் முறை மிகவும் பலவீனமாக இருப்பதாகவும், அதை முறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*