டெங்கு பாதிப்பு: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு?

”எனக்கு முதல்வராகும் எண்ணமில்லை” -தினகரன்

பஸ் பாஸ் கட்டண உயர்வு: 8-ஆம் தேதி அமல்?

பேருந்து கட்டண உயர்வு :திமுக இன்று அனைத்துக் கட்சி கூட்டம்..!

டெங்கு பாதிப்பு குறித்து 3 வாரத்தில் பதில் தர மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் டெங்கு பாதிப்பு அதிகரித்து உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. 2017-இல் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நாடு முழுவதும் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். டெங்குவால் இறந்தோர் எண்ணிக்கையும் கடந்த ஆண்டில் அதிகரித்துள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. டெங்கு குறித்து பொதுநல நீதிபதி மதன் பி லோக்குர் அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. எந்த மாநிலத்தில் டெங்கு பாதிப்பு அதிகம் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பின்னர் டெங்குவால் இறந்தோரின் எண்ணிக்கையின் விவரத்தை தர அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. டெங்குவை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் மத்திய அரசு அறிக்கை தர ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அம்மா ஸ்கூட்டர்: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*