பஸ் பாஸ் கட்டண உயர்வு: 8-ஆம் தேதி அமல்?

பேருந்து கட்டண உயர்வு :திமுக இன்று அனைத்துக் கட்சி கூட்டம்..!

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மூலம் இயக்கப்படும் பேருந்துகளின் கட்டணத்தை கடந்த மாதம் 20-ஆம் தேதி முதல் தமிழக அரசு உயர்த்தியது. அதனை தொடர்ந்து சென்னை மாநகர பேருந்தில் பயணம் செய்வதற்கான மாதாந்திர பஸ் பாஸ் விலை ரூ.1,000-இல் இருந்து, ரூ.1,300-ஆக உயர்ந்தது. மேலும் ஒரு நாள் பயணம் செய்வதற்கான பஸ் பாஸின் விலை ரூ.50-இல் இருந்து, ரூ.80-ஆக உயர்த்தியது.

தமிழக அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தியதற்கு எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. மேலும் கல்லூரி மாணவர்களும் வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணத்தை தமிழக அரசு சிறிதளவு குறைத்தது. ஆனால் முழுமையாக பேருந்துக் கட்டண உயர்வு திரும்பப்பெறப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில் மாதாந்திர பஸ் பாஸ் மற்றும் ஒரு நாள் பஸ் பாஸின் கட்டணத்தை அரசு உயர்த்தியுள்ளது. புதிய கட்டண உயர்வு சென்னையில் வரும் 8-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*