பேருந்து கட்டண உயர்வு :திமுக இன்று அனைத்துக் கட்சி கூட்டம்..!

தமிழகத்தில் பேருந்துக் கட்டணங்களை ஒரே இரவில் ரூ.3,600 கோடி அளவுக்கு உயர்த்திவிட்டதாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டிவருகின்றன. ஏழை, எளிய மக்களைக் கடுமையாகப் பாதிக்கும் கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள், அரசியல் கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தப் போராட்டங்களின் விளைவாக, உயர்த்திய பேருந்துக் கட்டணத்தை ஓரளவுக்குக் குறைத்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், தமிழக அரசு குறைந்த அளவே கட்டணத்தைக் குறைத்துள்ளதாகவும், முழுமையான கட்டணக் குறைப்பை அறிவிக்க வேண்டும் என்றும் எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்துவருகின்றன. இந்த நிலையில், பேருந்துக் கட்டண உயர்வு தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தி.மு.க இன்று (6.2.2018) நடத்துகிறது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், ம.தி.மு.க, இந்தியக் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் காலை 10 மணிக்கு இந்தக் கூட்டம் தொடங்குகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*