மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து: அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்தின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை அறிக்கை தர உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. அபுல் கலாம் ஆசாத் என்பவர் தாக்கல் செய்த மனு தொடர்பான வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கை பிப்ரவரி 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

உலகப்புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோயில், கிழக்கு ராஜ கோபுரம் அருகே, ஆயிரம் கால் மண்டபம் பகுதியில் 86-க்கும் மேற்பட்ட கடை இயங்கி வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன் இரவு 10 மணிக்கு மேல் அந்த பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. கோயில் ஊழியர்கள் சிலர் வந்தபோது, தீ விபத்தை கண்டு அதிர்ச்சி அடைந்து பாதுகாப்பு போலீசாரிடம் கூறினர்.

பின்னர் திடீர்நகர் தீயணைப்பு துறைக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். மேற்கு கோபுரம் முன் நிறுத்தப்பட்டிருந்த தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது. பல மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் 30-க்கும் மேற்பட்ட கடைகள் தீயில் எரிந்து சாம்பலாகின. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து சம்பவம் தமிழக மக்களிடம் பரபரப்பைன் ஏற்படுத்தியது. அதுகுறித்து பல ஜோதிடர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*