சரத் பிரபு மரணத்தில் மர்மம்: சிபிஐ விசாரிக்க கோரிக்கை

திருப்பூர் மருத்துவ மாணவர் சரத் பிரபு டெல்லியில் மர்மமாக உயிரிழந்த வழக்கு தொடர்பாக 27 நாட்கள் ஆகியும் போலீசார் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்று வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் ஆவணங்கள் எதையும் தர மறுப்பதாகவும் அவர் புகார் தெரிவித்தார். மருத்துவ மேற்படிப்பு மாணவர் சரத் பிரபு 36 மணி நேரம் பணிபுரிய நிர்பந்திக்கப்பட்டதாக கூறியுள்ளார். 36 மணி நேர பணி நிர்பந்தம் காரணமாக கடும் மன உளைச்சலில் சரத் பிரபு இருந்ததாக கூறினார்.

மாணவர் சரத் பிரபு இறப்பு குறித்து சிபிஐ விசாரிக்க கோரி மனுதாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக இந்த வழக்கில் ஆஜராகி வரும் வழக்கறிஞர் ராம்ராஜ் தகவல் தெரிவித்துள்ளார். சரத் பிரபு மர்ம மரணம் குறித்து உவிசாரிக்க டெல்லி முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*