போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய உயர்வு: நீதிபதி பேச்சுவார்த்தை?

விரைவில் பேசுவார் கருணாநிதி..!

”ஒபிஎஸ்-இபிஎஸ் முதல்வராகும் போது நான் ஆகக் கூடாதா? – தங்க தமிழ்ச்செல்வன்

போக்குவரத்து ஊழியர் ஊதிய உயர்வு குறித்து பிப்ரவரி 9-ஆம் தேதி நீதிபதி பத்மநாபன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். பேச்சுவார்த்தையில் பங்கேற்க அனைத்து தொழிற்சங்கத்தினருக்கும் நீதிபதி பத்மநாபன் அழைப்பு விடுத்துள்ளார். அரசுக்கும், ஊழியர்களுக்கும் மத்தியஸ்தராக ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் நியமிக்கப்பட்டார்.

ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கையை வலியுறுத்தி போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஜனவரி 4-ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினார்கள். தி.மு.க. உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் தமிழகம் முழுவதும் பேருந்து சேவை பாதிக்கப்பட்டது. தற்காலிக ஊழியர்கள் மூலம் அரசுப் பேருந்துகளை இயக்கவும் அரசு நடவடிக்கை எடுத்தது. இதனிடையே, போக்குவரத்து தொழிலாளர் விவகாரத்தில், அரசு, தொழிலாளர் இடையே மத்தியஸ்தம் செய்ய நீதிபதி பத்மநாபனை சென்னை உயர்நீதிமன்றம் நியமனம் செய்தது. இதனை அடுத்து அவர்கள் ஜனவரி 11-ஆம் தேதி தங்கள் போராட்டத்தை கைவிட்டு மீண்டும் பணிக்கு திரும்பினர். இந்நிலையில் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தை அடுத்து பேருந்து கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*