விண்ணில் ஏவப்பட்டது ஃபால்கான் ஹெவி

உலகின் பெரிய ராக்கெட்டான ஃபால்கான் ஹெவி, ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனம் மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலோன் மஸ்க்கின் கனவுத் திட்டம் வெற்றிகரகமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. உலகிலேயே இதுதான் பெரிய சக்தி வாய்ந்த ராக்கெட் ஆகும். 18 போயிங் விமானங்களுக்கு இணையான சக்தியும், 747 ஜெட் விமானங்களுக்கு இணையாக வேகமும் கொண்டது. நேற்று இரவு 12 மணிக்கு இந்த ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது. அப்போலோ 11 ஏவப்பட்ட அதே இடத்தில் இருந்து 18,747 ஜெட் வேகத்தில் ஏவப்பட்டு இருக்கிறது. இவ்வளவு பெரிய சக்தியை உருவாக்க இதில் 27 எஞ்சின்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. எதிர்காலத்தில் நிலவிற்கு, செவ்வாய்க்கும் மனிதர்களை அனுப்ப இந்த ராக்கெட் பயன்படுத்தப்பட இருக்கிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*