விரைவில் பேசுவார் கருணாநிதி..!

நேரு காந்தியை விமர்சித்த மோடி..!

முடக்குவாத அச்சுறுத்தல் :ரேஷனில் மசூர் பருப்பை நிறுத்தவும் பழனிசாமி முடிவு?

”உங்கள் குப்பைகளை எங்களிடம் கொட்டாதீர்கள்” – மத்திய அரசை சாடிய நீதிபதிகள்…!

”ஒபிஎஸ்-இபிஎஸ் முதல்வராகும் போது நான் ஆகக் கூடாதா? – தங்க தமிழ்ச்செல்வன்

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று, தற்போது கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார்.சளித்தொந்தரவு காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படாமல் இருப்பதற்காக தொண்டையில் ‘டிராக்யாஸ்டமி’ கருவி பொருத்தப்பட்டு உள்ளது. அவரை பல்வேறு கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் அவ்வப்போது சந்தித்து வருகிறார்கள்.

தற்போது அவரது உடல் நிலை சீராக இருப்பதால் தொண்டையில் பொருத்தப்பட்டுள்ள கருவியை அகற்ற டாக்டர்கள் ஆலோசித்து வருகிறார்கள். இதற்காக அவருக்கு முழு உடல் பரிசோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.இதன் காரணமாக கடந்த 31-ந்தேதி பல் சம்பந்தமான பரிசோதனைக்காக தேனாம்பேட்டையில் உள்ள தனியார் பல் ஆஸ்பத்திரிக்கு சென்று வந்தார்.இந்த நிலையில் நேற்றிரவு கண் பரிசோதனைக்காக அவரை அகர்வால் கண் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. சிகிச்சை முடிந்ததும் சிறிது நேரத்தில் அவர் வீடு திரும்பினார்.அடுத்ததாக வயிறு சம்பந்தமான பரிசோதனை நடத்த உள்ளனர். அனைத்து முழு உடல் பரிசோதனையும் முடிந்தபிறகு தொண்டையில் பொருத்தப்பட்டுள்ள கருவியை எடுக்கும் பட்சத்தில் கருணாநிதி பேசத் தொடங்கிவிடுவார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*