பாஜகவை தோற்கடிக்க ராகுலுடன் செயல்படுவேன்: சோனியா காந்தி

pc: NDTV

ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

வளர்ச்சி :தாயின் உடலை அடக்கம் செய்ய பிச்சை எடுத்த சிறுவர்கள்..! video

”எனக்கு முதல்வராகும் எண்ணமில்லை” -தினகரன்

பாராளுமன்றத் தேர்தலுக்கு இப்போதே தயாராக வேண்டும் என காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி அறிவுறுத்திவுள்ளார்.

பாராளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், டெல்லியில் இன்று காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கலந்துகொண்டு உரையாற்றினார்.

அதில் அவர், “நாம் புதிய தலைவரை பெற்றிருக்கிறோம். தலைவர் பதவியில் அவர் சிறப்பாக செயல்பட வேண்டும் என உங்கள் சார்பிலும் நானும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அரசாங்கம் பதவிக்கு வந்து கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த ஆட்சியில் நீதித்துறை, ஊடக மற்றும் சிவில் சமூகம் என அனைத்தும் திட்டமிட்ட தாக்குதலுக்கு உட்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகளுக்கு எதிராக புலனாய்வு அமைப்புகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன. குஜராத் மற்றும் சமீபத்தில் நடந்து முடிந்த ராஜஸ்தான் தேர்தல் முடிவுகள் நமக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. இது மாற்றத்திற்கான நேரம் வருவதை காட்டுகிறது. இதேபோல், காங்கிரஸ் கட்சியின் எழுச்சிக்கு எடுத்துக்காட்டாக கர்நாடக தேர்தலையும் எதிர்பார்க்கிறேன். நாடாளுமன்றத் தேர்தல் முன்கூட்டியே வரலாம். எனவே, எம்.பி.க்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். பாராளுமன்றத் தேர்தலில் பாஜ.க.வை தோற்கடிக்க கட்சியின் தலைவர் ராகுலுடன் இணைந்து செயல்படுவேன்” என்று தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*