ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

pc: deccan chronicle

வளர்ச்சி :தாயின் உடலை அடக்கம் செய்ய பிச்சை எடுத்த சிறுவர்கள்..! video

கச்சத்தீவு அருகே எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் இன்று காலை கைது செய்துள்ளனர். ராமநாதபுரத்தை சேர்ந்த மீனவர்கள் 500-க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகளுடன் நேற்று இரவு மீன் பிடிக்க சென்றனர். கச்சத்தீவு பகுதியில் நள்ளிரவில் இலங்கை கடற்படையினர் ரோந்து பணிக்கு வந்துள்ளனர்.

அப்போது அங்குள்ள மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டி அடித்துள்ளனர். மேலும் படகுகளை சேதப்படுத்தியும், வலைகளை வீசி எரிந்தது மட்டுமல்லால் 7 தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்துள்ளதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

சட்ட விரோதமாக மீன் பிடித்ததாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், இலங்கை கடற்படையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருபதால், அதனை தடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*