டிஜிட்டல்வாசி: எங்களுக்கு லட்சியம் தான் முக்கியம் – ஜீயர் பரிதாபங்கள்

ஆண்டாள் பிரச்சனையில் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜீயர் எடுத்த உண்ணாவிரதம் தான் இனி வரும் சந்ததிகளுக்கு முன்னோடியாக அமையப் போகிறது. இனிவரும் காலங்களில் உண்ணாவிரதம் என்றால் என்ன என்ற கேள்விக்கு, நமக்கு பசிக்கும் நேரத்தில் மட்டும் சாப்பிட்டு விட்டு மீதி நேரம் அமைதியாக இருப்பதென பதில் வரும்… வாழ்க ஜீயர் வளர்க உண்ணாவிரதம்

 

@Dhana sakthi
#காதல்ங்கிறது
ஜீயரின் உண்ணாவிரதம்
போல் மானங்கெட்டது..

@Aashni Ravi
ஜீயர் உண்ணாவிரதம் இருக்க போறார்ன்னு நியூஸ்ல கமெண்ட் போட்ட 2000 பேர்ல 1400 பேர் சிரிப்பு ஸ்மைலியா போடுறானுங்க. ஒரு ஈவு இரக்கம் இல்லையா உங்களுக்கு.😩

அப்படி என்னய்யா தப்பு பண்ணினார்
அவரு. ஏதோ ரெண்டு நாள்ள மறந்துருவிங்கங்கற நம்பிக்கையில உண்ணாவிரதம் இருக்கேன்னாரு. ஏன் இருக்கல ஏன் இருக்கலன்னு கொஞ்சமா டார்ச்சர் பண்ணுனிங்க.

வேணாம். எங்களுக்கும் சூது தெரியும். அவ்ளோதான்…

@Arul Ezhilan

ஜீயர் உண்ணாவிரதம் வாபஸ்…பசிக்கொடுமைதான் என்ன செய்ய..!

 

@Mathavan S

ஜீயர் உண்ணாவிரதம் காரணமாகவே கோயில்களில் தீவிபத்து என பெரியோர்கள் கூறியதால்..!!!
ஜீயர் உண்ணாவிரதம் வாபஸ்..!!!

 

@Bilal Ahmed Ansari
Test match, Day 2, Lunch break….Jeeyar ;p

 

@Hari Siddharthan

ஜீயர் மாதிரி சங்கராச்சாரியும் உண்ணாவிரதம் இருந்தா !
இருந்தா ?
அப்புறம் எஸ்.வி.சேகரோட கதி !!!
ஆட்டோமெடிக்கா அவரும் உண்ணாவிரதம் இருக்க வேண்டி இருக்கும்.

 

@Jeyachandra Hashmi
ஜீயர் சாகற வரைக்குமா உண்ணாவிரதம் இருக்காரு?
இல்ல பசிக்குற வரைக்கும்…!!

 

@மு.சே. கலைச்செல்வன்
வாழ்க்கை ஒரு சோடா பாட்டில் ஜீயர், அடிக்கடி உண்ணாவிரதம் இருக்கிறது😢😢🚶🚶🚶🚶

 

@திலிப்_குமார்
தண்ணீரிலே இருக்கும் மீன் கருவாடு ஆகலாம்.. ஆனால் கருவாடு மீன் ஆக முடியாது..
எங்களுக்கு லட்சியம் தான் முக்கியம் – ஜீயர்😔😔

 

@வாட்ஸாப்

கி. பி 2018 :
வைரமுத்து மன்னிப்பு கேட்கும் வரை ஆண்டாள் சந்நிதியில் ஜீயர் சாகும்வரை உண்ணாவிரதம்.

கி. பி 2019:போன வருடம் வைரமுத்து மன்னிப்பு கேட்காததால்,இந்த வருடமும் சில நாட்கள் ஜீயர் சாகும் வரை உண்ணாவிரதம்.

கி. பி 2050: மார்கழி மாதம் ஆண்டாளுக்காக உண்ணாவிரத மாதம்.

கி. பி 2100 : ஆண்டுதோறும் மார்கழியில் கொண்டாடப்படும் உண்ணாவிரத பண்டிகை இந்த வருடமும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

கி. பி 2400:

“உண்ணாவளி பண்டிகைன்னா என்னம்மா?அதை நாம எதுக்கு கொண்டாடுறோம்?”

“அந்த காலத்துல வைரமுத்துன்னு ஒரு அரக்கன் இருந்தான்.பத்து தலை, இருபது மூக்கு ன்னு பாக்கவே ரொம்ப பயங்கரமா இருப்பான்.அவன் மக்களை எல்லாம் கொடுமைப்படுத்தினான்.அது பத்தாதுன்னு நம்ம கடவுளான ஆண்டாளையே வம்புக்கிழுத்தான்.பொறுத்துப் பொறுத்து பார்த்த ஆண்டாள்,மார்கழி மாசத்துல,சுக்லபட்ச திதில, ஜூயர் கனவுல தோன்றி,அரக்கன் வைரமுத்துவை அடக்க சொன்னார்.ஜீயரும் உண்ணாவிரதம் இருந்து,தன்னோட தவ வலிமையால வைரமுத்துவை அடக்கினார்.அந்த நாள் தாம்மா உண்ணாவளி பண்டிகை…”

கி. பி 2500 :

தலைப்புச் செய்திகள் :

இந்தியாவில் உண்ணாவளிப் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.தலைவர்கள் வாழ்த்து.

அமெரிக்க அதிபர் இந்துக்களுடன் உண்ணாவளியைக் கொண்டாடினார்.

இங்கிலாந்து பிரதமர் குத்துவிளக்கு ஏற்றி கொண்டாட்டம்.

உண்ணாவளி மாத 12 ராசிகளுக்கான பலன்கள்.கணித்தவர் ஜோதிட அலங்காரம் திரு. பல்லி அவர்கள்.

உண்ணாவளி பண்டிகையை ஒட்டி தமிழ்நாட்டில் டாஸ்மாக் விற்பனை ஐயாயிரம் கோடியைத் தாண்டியது.

கி. பி 2550 :

“அடேய் தமிழர்களே உண்ணாவளி தமிழர்கள் பண்டிகையே அல்ல….”

“இந்த பெரியாரிஸ்ட்களே இப்டித்தாங்க.பீடைங்க.இந்துக்களோட பண்டிகை வந்துறக் கூடாதே….நல்ல நாளும் கிழமையுமா…வந்துர்றானுங்க…தித்திக்கும் உண்ணாவளி வாழ்த்துகள் ப்ரோ…”

ஒரு பண்டிகையின் கதை….

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*