
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் பக்தர்கள் செல்போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளை தவிர மற்றவர்கள் கோயிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்லக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கிருபாகரன், தாரணி உத்தரவிட்டுள்ளனர். கோயிலுக்குள் செல்லும் முன் செல்போன்களை கொடுத்து செல்ல கவுண்டர்களை உருவாக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மீனாட்சி அம்மன் கோயிலில் மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுக்காப்பு அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காசி, திருப்பதி கோயில்களுக்கு அடுத்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு அளிக்கப்பட இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து அங்கிருந்த கடைகள் இன்று அகற்றப்பட்டன. மேலும் கோயிலை பாதுகாக்கும் நடவடிக்கையில் நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்துக்கு பிறகு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Leave a Reply