சுகாதாரம் :கேரளம் முதலிடம் மூன்றாமிடம் தமிழகத்திற்கு..!

நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்டுள்ள நாட்டின் சுகாதார மற்றும் உடல்நலக் குறியீடு பட்டியலில் கேரளா முதலிடம் பிடித்துள்ளது. தமிழகம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பிஹார் போன்ற மாநிலங்கள் மிக மோசமான நிலையில் உள்ளன.நாடுமுழுவதும் மக்களுக்கு கிடைக்கும் சுகாதார வசதி, உடல்நலம் பேணும் செயல்பாடுகள் தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் நிதி ஆயோக் ஆய்வு செய்துள்ளது.

உலக வங்கி மற்றும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் தொழில்நுட்ப உதவியுடன் இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மக்களின் வாழ்நாள், நோய் எதிர்ப்பு சக்தி, எச்ஐவி உள்ளிட்ட பாதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.நாடுமுழுதும், 2015- 16ம் ஆண்டில், 730 மாவட்டங்கள், அங்குள்ள முக்கிய மருத்துவமனைகளில் புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு இதன் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக அனைத்து புள்ளிகளின் அடிப்படையில் கணக்கிட்டால் 80 புள்ளிகளுடன் கேரளா முதலிடத்தில் உள்ளது.

பஞ்சாப் 65.21 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், தமிழ்நாடு 63.38 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. குஜராத் 61.99 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், இமாச்சல பிரதேசம் 61.02 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.அதேசமயம் சுகாதார குறியீட்டில் அதிகம் பின் தங்கிய மாநிலங்களில் உத்தரப் பிரதேசம் முதலிடம் வகிக்கிறது. இதைத் தவிர,ராஜஸ்தான், பிஹார், ஒடிசா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்கள் கடைசி இடங்களில் உள்ளன. எனினும் கடந்தமுறை நடந்த ஆய்வை ஒப்பிடுகையில், தற்போது அந்த மாநிலங்களில் சுகாதாரத்துறையின் செயல்பாடுகள் சற்று மேம்பட்டுள்ளன.எச்ஐவி சிகிச்சையில் மணிப்பூரும், காசநோய் சிகிச்சையில் லட்சதீவும் முதலிடத்தில் உள்ளன

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*