ஜெ படத்திறப்பு:ஏன் வரவில்லை மோடி?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை தமிழக சட்டமன்றத்தில் பிரதமர் மோடி திறந்து  வைக்க வேண்டும் என்று ஒபிஎஸ் -இபிஎஸ் இருவரும் காத்திருந்த நிலையில் அவர் இந்த நிகழ்வுக்கு வரமாட்டார் என்பது தெரிந்த பின்னர். ஜெயலலிதா படம் திறக்கப்பட இருக்கிறது.

தமிழகத்தில் 2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைந்தது.  அக்கட்சியின் பொது செயலாளரான ஜெயலலிதா மீண்டும் முதல் அமைச்சர் ஆனார்.இந்த நிலையில் உடல் நல குறைவால் அப்பல்லோ தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி மரணம் அடைந்து விட்டார்.இதனை தொடர்ந்து சட்டப்பேரவையில் அவரது படம் திறந்து வைக்கப்படும் என அக்கட்சி சார்பில் கூறப்பட்டது.  தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா படம் வருகிற 12ந்தேதி திறக்கப்படுகிறது என அதிகாரப்பூர்வ தகவல் தெரிவித்துள்ளது.ஜெயலலிதாவின் படத்தினை முதல் அமைச்சர் பழனிசாமி திறந்து வைக்கிறார்.  பட திறப்பு விழாவில் துணை முதல் அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் சபாநாயகர் தனபால் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்த  படம் திறப்பு விழாவுக்கு மோடியை அழைத்து  வந்த பிரமாண்டம் காட்ட பன்னீர்செல்வமும், பழனிசாமியும் முயன்ற நிலையில் தமிழக அரசியல் சூழல் காரண்மாக மோடி இந்த விழாவுக்கு வரவில்லை. ஊழல் வழக்கில் குற்றம் சட்டப்பட்ட ஜெயலலிதா இறந்து விட்டதால் இரண்டாவது குற்றவாளியான சசிகலா சிறையில் இருக்கிறார்.  என்றாலும் இறுதி தீர்ப்பில் ஜெயலலிதாவும் குற்றாவாளிதான் என்பதை உறுதி செய்தது. ஊழலுக்கு எதிராக போராடுவதாகக் கூறும் மோடி ஜெயலலிதாவின் படத்தை திறந்து வைத்தால் அது இந்தியா முழுக்க விவாதமாகி அதுவும் கெட்ட பெயராகி விடும் என்பதால் மோடி இந்த நிகழ்ச்சியை தவிர்த்ததாக கூறப்படுகிறது. மோடிக்காக பல மாதங்கள் காத்திருந்து  ஏமாற்றம் அடைந்த  ஒபிஎஸ்-இபிஎஸ் இருவரும் அவர்களே படத்தை திறந்து வைக்க முடிவு செய்துள்ளார்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*