உபி மாணவர்கள் எதிர்காலம் என்ன?

Cheating slips thrown on road after exam was finished during first Under Graduate Exam at Post Graduate Govt College in Sector 11 of Chandigarh on Wednesday, April 02 2014. Express photo by Sumit Malhotra
உத்தர பிரதேசத்தில்  10 மற்றும் 12 ம் வகுப்பு  தேர்வுகள் நடைபெற்று வருகிறது.  இந்த தேர்வு கடந்த செவ்வாய் கிழமை 6-ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 12-ம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.  முதல் நாள் நடைபெற்ற தேர்வில் 1.8 லட்சம் மாணவ மாணவிகள் தேர்வு எழுதவில்லை. இரண்டாவது நாளில் நடைபெற்ற தேர்வில் 5 லட்சம் மாணவ மாணவிகள் தேர்வு எழுதவில்லை. இதுவரை நடந்துள்ள 4 தேர்வுகளில் மொத்தம் 10 லட்சம் பேர் எழுதவில்லை,
பரீட்சையில் காப்பி அடிப்பதை  தவிர்ப்பதற்காக அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட கடுமையான நடவடிக்கைகளால் மாணவர்கள் பரீட்சை  எழுத வரவில்லை என கூறப்பட்டது.
இது குறித்து அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறியதாவது:
பரீட்சை குறித்து மாணவர்கள் இடையே பயம் ஏற்பட்டுள்ளது. இதுவரை நடந்துள்ள தேர்வுகளில் 10 லட்சம் மாணவ மாணவிகள் தேர்வு எழுதவில்லை. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. இதனை நாங்கள் இப்படியே விட்டுவிடமாட்டோம். தேர்வுகளை எளிமையாக்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம். பெற்றோர்கள், ஆசிரியர்கள் மாணவர்களை போட்டு திணிக்ககூடாது. கடந்த 10 மாதங்களில் 6 லட்சம் மாணவர்கள் திறன் மேம்பாட்டு திட்டத்தில் சேர்ந்து  1.4 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது, கிராமங்களில் இருந்து கொண்டே 15,000 முதல் 40,000 வரை சம்பாதிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*