காந்தியும் பெரியாரும் என் ஹிரோக்கள்:கமல்

அமெரிக்க நாட்டின் ஹார்வர்டு பல்கலை கழகத்தின் பிசினஸ் ஸ்கூல் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.  அவர் தமிழில் வணக்கம் என கூறி மாணவர்களிடையே தனது உரையை தொடங்கினார்.  அவர் பேசும்பொழுது, 2018ல் அரசியல் பயணத்தினை தொடங்கிய நான் கிராமத்தில் இருந்து மாற்றங்களை தொடங்குகிறேன் என கூறினார்.

தொடர்ந்து அவர், எனது நோக்கமும், ரஜினியின் நோக்கமும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதே.  தமிழன் என்பது விலாசமே தவிர தகுதி அல்ல என கூறியுள்ளார்.

எனது நிறம் காவியாக இருக்காது என தெரிவித்து கொள்கிறேன்.  எனக்கு என்ன வேண்டும் என தேர்வு செய்வது எனது உரிமை.  அதனை மற்றவர்கள் தீர்மானிக்க கூடாது என கூறிய அவர் தமிழகத்தில் தாம் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கிராமத்தினை தத்தெடுத்து பணியாற்ற போவதாக அறிவித்துள்ளார்.

தேர்தல் அரசியலை கடந்து காந்தி மற்றும் பெரியார் எனது ஹீரோக்கள்.  நான் வித்தியாசமானவர் என கூறவில்லை.  அரசியலில் வித்தியாசமானவராக இருக்க விரும்புகிறேன்.

இந்த மாற்றத்திற்கு அனைவரின் பங்களிப்பையும் எதிர்பார்க்கிறேன்.  உங்களிடம் கையேந்தி வந்திருக்கிறேன்.  பணத்திற்காக அல்ல.  உங்களது நல்ல கருத்திற்காக என கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தனது உரையின் இறுதியில் நாளை நமதே என கூறி முடித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*