நெல்லை கலெக்டர் அலுவலக ஊழியர் தூக்கு அதிகாரிகள் டார்ச்சர்?

பாளை ஆயிரத்தம்மன் கோவில் அருகே உள்ள திருவடி தெருவை சேர்ந்தவர் முத்துமாலை(வயது 37). இவர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நில அளவைதுறையில் ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று இவர் வழக்கம்போல பணிக்கு சென்றார். மாலையில் அவர் வீடு திரும்பினார். அப்போது அவர் மன சோர்வுடன் காணப்பட்டாராம்.

இதுபற்றி வீட்டில் கேட்ட போது எதுவும் பேசவில்லை. பின்னர் அவர் படுக்க சென்றுவிட்டார். இந்த நிலையில் இன்று காலை வெகுநேரம் வரை அவரது வீட்டு கதவு திறக்கப்படாமல் இருந்தது. சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது அவர் தூக்கில் பிணமாக கிடந்தது தெரியவந்தது.

இதையடுத்து பாளை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கதவை திறந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முத்துமாலை தற்கொலைக்கு காரணம் என்ன என்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் உயர் அதிகாரிகள் டார்ச்சர் காரணமாக அவர் தற்கொலை செய்ததாக பரபரப்பு தகவல் வெளியானது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் முத்துமாலையின் உறவினர்கள் அங்கு கூடினர். முத்துமாலை தற்கொலைக்கு காரணமானவர்களை உடனே கைது செய்யவேண்டும் என வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால் அங்கு மேலும் பரபரப்பு உண்டானது.

இதையடுத்து முத்து மாலையின் உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*