இலங்கை உள்ளாட்சி தேர்தல் :ராஜபக்‌ஷே வெற்றி..!

இலங்கையில் நேற்று (10-ம் தேதி) உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.  சிறிசேனா தலைமையிலான இலங்கை சுதந்திரக் கட்சியும் (எஸ்.எல்.எஃப்.பி), ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் (யுஎன்பி) ஒன்றையொன்று எதிர்த்து, இத்தேர்தலில் போட்டியிட்டது.  24 நகராட்சி கவுன்சில்கள், 41 ஊரக கவுன்சில்கள், 275 பிரதேசிய சபாக்கள் என பல்வேறு உள்ளாட்சி அமைப்பகளுக்கும் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 1.6 கோடி வாக்காளர்கள் வாக்களித்தனர்.
இன்று காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டு, 81 கவுன்சில்களுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் முன்னாள் அதிபர் ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெருமுனா(எஸ்எல்பிபி) கட்சி 51 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.  விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி 10 இடங்களையும், தமிழ் தேசிய கூட்டமைப்பு 10 இடங்களிலும் வென்றுள்ளன.அதிபர் சிறிசேனவின் இலங்கை மக்கள் கட்சி, பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி ஆகியவை கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளன.முன்னாள் அதிபர் ராஜபக்சே தனது ஆதரவாளர்களுக்கு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ”இந்த வெற்றியை மிகவும் அமைதியாக கொண்டாடுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*