ஒவ்வொரு இந்தியரையும் அவமானப்படுத்தியுள்ளார் மோகன் பகவத்:ராகுல்காந்தி..!

பீகாரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தொண்டர்கள் கூட்டத்தின் முன், ராணுவத்தினை விட மிக வேகமுடன் ராணுவ வீரர்களை நாம் தயார் செய்து விடுவோம் என நேற்று பேசினார்.ராணுவ வீரர்களை தயார் செய்ய 6 முதல் 7 மாதங்கள் வரை ராணுவத்துக்கு தேவைப்படும்.  ஆனால் 3 நாட்களில் ராணுவ வீரர்களை நாம் தயார் செய்து விடுவோம்.  இது நம்முடைய திறன்.  நாட்டுக்கு அதுபோன்ற சூழல் ஏற்பட்டால் ஸ்வயம்சேவக் முன்னால் நிற்க தயாராக இருக்கிறது.  இதற்கு அரசியலமைப்பும் அனுமதி அளித்துள்ளது என கூறினார்.

அவரது பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.  அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பகவத்தின் இந்த பேச்சு ஒவ்வொரு இந்தியரையும் புண்படுத்தியுள்ளது.  ஏனெனில் நமது நாட்டுக்காக தியாகம் செய்தவர்களை இது அவமரியாதை செய்துள்ளது.

ஒவ்வொரு வீரரும் வணக்கம் செலுத்தும் நமது கொடியை அவமதித்துள்ளது.  உயிரிழந்த நமது வீரர்கள் மற்றும் நம்முடைய ராணுவத்தினரை அவமரியாதை செய்துள்ளார் பகவத்.  இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*