தமிழ் இருக்கை திமுக நிதி: உளறிக் கொட்டிய மாஃபா பாண்டியராஜன்..!

ஹார்ட்வர்ட் தமிழ் இருக்கை நிதிக்கு மாஃபா பாண்டியராஜன் தலைவரா?
ஹார்ட்வர்ட் பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்கைக்கு திமுக ஒரு கோடி நிதி உதவி அளித்தது. இந்த நிதி திரட்டலுக்கும் தமிழக அரசுக்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது. இந்நிலையில், “திமுக அளித்த நிதி இன்னும் வந்து சேரவில்லை” என்று கருத்து தெரிவித்திருந்தார் .ஆனால், ஹார்ட் வர்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு இந்தியாவில் நிதி திரட்டுவது தொடர்பாக ஆறுமுகம் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரிடம் ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அவர்கள் ஒரு கோடி நிதியை காசோலையாக ஒப்படைத்து விட்டார் இதற்கு ஆறுமுகம் நன்றியும் சொன்னார்.

திமுக விளக்கம்

இந்நிலையில், நிதி இன்னும் வந்து சேரவில்லை என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறியிருப்பது நிதிக்கு தானே பொறுப்பு என்று தன்னைத் தானே அறிவித்துக் கொள்ளும் நிலைக்கு வந்துள்ளார். உண்மையில் தமிழக அரசுக்கோ அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கும் இந்த நிதி திரட்டலுக்கும் எந்த தொடர்பும் இல்லாத நிலையில், திமுகவின் நிதியை முறையாக ஒப்படைக்கப்பட்டது கூட தெரியாமல் உளறிக் கொட்டுபவர் அமைச்சராக இருக்கிறார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*