வைரல் வீடியோ: சிறுவனை சந்தித்த பினராய் விஜயன்! video

பினராய் விஜயனை சந்திக்க வேண்டும் என கட்டிலில் கிடந்து அழுது புரண்ட சிறுவன் ஒருவனின் விடியோ கடந்த சில வாரங்களாகவே கேரளத்தில் பிரபலம்.முகநூல் வழியே கசிந்த இந்த விடியோ பொது மக்களையும் பாதித்தது. இந்த வீடியோ கேரள முதல்வரான பினராய் விஜயனை சென்றடைய அவர் அந்த சிறுவனை சென்று சந்தித்திருப்பது நெகிழ்ச்சியான சம்பவமாக பார்க்கப்படுகிறது.
“எனக்கு பினராய் விஜயனை பார்க்க வேண்டும்” என சிறுவன் அழும் வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவு செய்தது அவருடைய தாயார் ரசினா ரஞ்சித். “ நீ இப்படி அழுது கொண்டே இருந்தால் எப்படி பினராயி விஜயனை பார்க்க முடியும்?” என எப்படி சமாதானப்படுத்தியும் , சிறுவன சமாதானம் ஆகவேயில்லை.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர், பினராய் விஜயன் ரசினாவை தொடர்பு கொண்டு அவர்களுடைய வீட்டிற்கு வருவதை அறிவித்திருக்கிறார். அது மட்டுமில்லாமல், சிறுவனுக்கு தன்னுடைய படம் ஒன்றையும் பரிசாக கொடுத்திருக்கிறார். கம்யூனிஸ்டுகளின் மகிழ்ச்சி எளிமையானோர்களின் மகிழ்ச்சியாகவே இருக்கிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*