ஹரியானாவில் அமித்ஷா பிரமாண்ட சைக்கிள் பேரணி..!

அரியானா மாநிலத்தில் ஒரு லட்சம் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ பா.ஜ.க. தலைவர் அமித் ஷா வரும் 15-ம் தேதி நடத்தும் பேரணியை முன்னிட்டு உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் மற்றும் அரியானா சட்டசபை தேர்தலை குறிவைத்து ஜின்ட் நகரில் பா.ஜ.க தலைவர் அமித்ஷா பிரம்மாண்ட பேரணி நடத்த உள்ளார். வரும் 15-ம் தேதி நடக்க உள்ள இந்த பேரணியில் சுமார் ஒரு லட்சம் மோட்டார் பைக்குகளில் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என அம்மாநில பா.ஜ.க. தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தங்களது இனத்தவர்களின் மேம்பாட்டுக்காக முன்வைத்த கோரிக்கையை நிறைவேற்றாததால் இந்த பேரணிக்கு இடையூறு ஏற்படுத்தப் போவதாக அரியானாவில் உள்ள ஜாட் ஆரக்‌ஷான் சங்கர்ஷ் சமிதி என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
இதையடுத்து, ஜின்ட் மாவட்ட நிர்வாகம் சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. துணை ராணுவப் படையை சேர்ந்த 8 கம்பெனி வீரர்கள் இங்கு வந்து சேர்ந்துள்ளனர். 8 போலீஸ் சூப்பிரண்டுகள், 55 துணை சூப்பிரண்டுகள், 200 இன்ஸ்பெக்டர்கள், 5500 போலீசார் மற்றும் 250 பெண் போலீசார் பேரணி செல்லும் பாதையில் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*