ஹார்ட்வர்ட் தமிழ் இருக்கை நிதிக்கு மாஃபா பாண்டியராஜன் தலைவரா?

ஹார்ட்வர்ட் பல்கலைக்கழகத்தில் அமைய இருக்கும் தமிழ் இருக்கைக்கு திமுக ஒரு கோடி ரூபாய் நிதி அறிவித்த நிலையில், அந்த நிதி இன்னும் வந்து சேரவில்லை என்று தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவித்திருப்பதன் மூலம், தமிழ் இருக்கை அமைவதற்கான நிதி திரட்டும்  பொறுப்பை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஏற்றுக் கொண்டுள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது?

ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கான திமுக நிதி, ரூ.1 கோடி இன்னும் வரவில்லை என அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் தெரிவித்தார். அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைகள் அமைக்க  மொத்தம் 33 கோடி ரூபாய் ஆகும் என கணக்கிடப்பட்டது. இதனால், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தமிழ் இருக்கைக்காக நிதியுதவி வழங்கி வருகின்றனர். இதன் அடிப்படையில்,  ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில் சென்னையில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்ட தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மா.பா பாண்டியராஜன் கூறுகையில், ”ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு 3 கோடி ரூபாய்க்கும் மேல் தேவைப்படுகிறது. தி.மு.க. வழங்குதாக அறிவிக்கப்பட்ட நிதி இன்னும் வந்து சேரவில்லை. அவர்கள் இந்த நிதியை தருவதாகத்தான் அறிவித்துள்ளனர் என்றார்”.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*