Attitude issues :வெண்பா கீதாயன்

Attitude என்கிற வார்த்தை feminism என்னும் வார்த்தையை விட அதிகமாக misuse செய்துவிட்டோம். மண்டை இல்லாத மாட்டிற்கு கொம்பு முளைத்தது போல சிலரது attitude?!! அமைந்துவிடுகிறது. இந்த attitude மயிரை வைத்து நொடிக்கு நொடி தன்னை யாரிடமாவது நிரூபிக்க பிரயத்தனப்படுகின்றனர். உண்மையில் தானொரு alpha என்பதை எந்த ஒரு ஆணும் எந்த ஒரு பெண்ணும் யாருக்கும் காட்டவேண்டியதில்லை. நீங்கள் கட்டளைகள் இடலாம்; சொகுசான விஷயங்கள் செய்யலாம்; பெரிய அதிகாரத்தில் இருக்கலாம்; ஆனால் இவையனைத்தையும் அடுத்த நொடியில் துறக்கும் நிலை ஏற்பட்டாலும் இதே attitude இருக்குமா என்பதை யோசித்துப்பார்க்கலாம். உறுதிதன்மையற்று நீரில் புரண்டு சேற்றிலும் புரண்டு “பார் என்னால் சேற்றிலும் புரளமுடிகிறது, உன்னால் முடியுமா” என்பது முட்டாள்த்தனம். எனவே தன்னறம் அற்ற attitude என்பது வெறும் சந்தர்ப்பவாதம் மட்டுமே.

அடுத்த attitude issue வயது வேறுபாட்டால் வருவது, இது தீர்க்கவே முடியாத பிரச்சனை. உங்களுக்கு நாற்பது வயது; உங்களுக்குள் ஒரு சிறுமி இன்றும் இருக்கிறாள்; (சிறுமிதான், இளம்பெண் கிடையாது) எனக்கும் நாற்பது வயது ஆகிதான் தீரும் என்பதற்காக அதை ரசித்தே ஆகவேண்டுமென்பது கட்டாயமில்லை. வயதுக்கேற்ற பக்குவம்தான் நம்மை முன்னிலைப்படுத்தும். சிறுமியாக நீங்கள் காட்டிக்கொண்டால் ஏமாற்றப்படுவீர்களேயொழிய ரசிக்கப்பட மாட்டீர்கள். வயது ஆவது ஒரு கொண்டாட்டம். சில ஆண்களிடம் நான் மிக மூத்தவளாய் உணர்வேன். அதுதான் எனக்கு உவப்பானது. சிறுமிக்குரிய உடல் இருக்கலாம். ஆனால் மனதை முதிர்ச்சி கொண்டவளாகவே மாற்ற விழைகிறேன்.

நாற்பது வயது ஆணும் இருபது வயது ஆணும் மிகச் சாதாரணமாக நட்பு பாராட்டலாம். அந்தரங்க விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். அதே சமயம் ஒரு இருபது வயதுப் பெண்ணால் நாற்பது வயது பெண்மணியிடம் நட்பு பாராட்ட இயலாது. நம்பி எதையாவது சொல்லிப்பாருங்கள். மறுநாள் ஒரு பத்து பேர் “உங்க அக்காவ வச்சுதான் பேக்கரி வாங்கினியாம்ல” என்பார்கள். அதேசமயம் தன்னைப்பற்றி எந்த விஷயம் வெளியில் வந்தாலும் அதற்கு நாம்தான் காரணமென்றும் தீர்க்கமாக நம்புகின்றனர். ஏனெனில் தன்னைப்போலதானே பிறர்மீதான நம்பிக்கையும் இருக்கும். இவ்வகை பெண்களால் எதையும் நேரடிப்பொருளாகவோ பொதுப்பொருளாகவோ எடுத்துக்கொள்ளவோ இயலாது. உதாரணமாக டீ சாப்பிடுவதில்லை என டீயை மறுத்தால் வெளியில் போய் “எம்வூட்டு டீய குடிக்க மாட்டாளாம்” என்று பேசுகின்றனர். சிறுமிக்குரிய அறிவு கொண்டிருப்பது இவ்வகையான சிக்கல்களை ஏற்படுத்தும்.

இந்த வித்தியாசமான மற்றொரு attitudeஐ அதிபயங்கரமாக ஆண்களிலும் பெண்களிலும் பார்க்கின்றேன். அதாவது தனக்கு competition இருக்கின்றது என்பதை மூன்றாவது நபரை வைத்து வெளிப்படுத்தி approach செய்கின்றனர். சமீபத்தில் ஒரு உத்தமர் “அந்தப்பெண் என்னைக் காதலிப்பதாகச் சொன்னாள் நான் உங்கள் பெயரைச் சொல்லித் தப்பித்துக்கொண்டேன்” என்று sample flirting செய்தார். “எனக்கு உங்ககூட friendlistல இருக்கறதுலகூட பெரிய interest இல்ல… ” என்றதும் block செய்துவிட்டார். ஒரே ஒருமுறை ஒரு பொதுவிழாவில் தூரத்தில் hai சொன்னதற்கு girlfriendஆக ஆக்கிக்கொண்டது அவரது விதி எனக் கொள்ளலாம்.

பிகு: நாற்பது அறுபது என்றில்லை; எண்பது வயது கூட ஆகலாம்; அன்று என்னுடைய attitude என்பது நான் குழறாமல் பேசுவதிலும் தடுமாறாமல் நடப்பதிலும் இருந்தால் போதும். இந்த சிறுமி மனோபாவம் மற்றும் மிகைப்படுத்தப்பட்ட போலி ரசனை பிம்பங்கள் போன்றவற்றில் ஒருபோதும் விருப்பம் கொள்வதில்லை. Loveஉம் lustஉம் அனைவருக்குமானது. அது தனக்கு வேண்டுமென கேட்டுப் பெறலாம். பக்கத்து இலையைக் காட்டி பாயாசம் கேட்கும் பாவனையில் நான் காதலிக்க இங்கு வரவில்லை; ஆனால் என்று பத்து பக்கத்திற்கு விளக்கம் வரைவது மனநலத்திற்கு நல்லதன்று. இத்தகைய அதிகாவிய மனநிலையில் ஆண்களோ பெண்களோ இதை வாசித்துக்கொண்டிருந்தால் தயவுசெய்து unfriend செய்துவிட்டு தத்தமது வேலையைப் பார்க்கலாம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*