சந்திரபாபு நாயுடு: இந்தியாவிலேயே வசதியான முதல்வர்?

ரவுடி பினு போலீசில் சரண்..!

ஜனநாயகம் மறுமலர்ச்சி மையம் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் மற்றும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் சொத்து மதிப்பு ரூ.177 கோடி என்றும் இந்தியாவிலேயே மிகவும் வசதியான முதலமைச்சர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மிக குறைந்த சொத்து மதிப்பு கொண்ட முதலமைச்சராக திரிபுராவின் மாணிக் சர்க்கார் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இந்தியாவின் வறுமையான முதலமைச்சர் என்ற பெயரை திரிபுராவின் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியின் முதல்வர் மாணிக் சர்க்கார் பெற்றுள்ளார். இவரின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ. 26 லட்சம் ரூபாய் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணிக் சர்க்காரை தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் சொத்து மதிப்பு ரூ. 30 லட்சம் என்றும் இந்தியாவிலேயே 2-ஆவது வறுமையான முதலமைச்சர் மம்தா என்றும் அந்த அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.இதனிடையே வசதியான முதலமைச்சர் பட்டியலில் அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா கந்து ரூ. 129 கோடி மதிப்புள்ள சொத்துகளை கொண்டு 2-ஆவது இடத்தில உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக பஞ்சாப் முதலமைச்சர் அமீர்ந்தர் சிங் ரூ. 48 கோடி மதிப்புள்ள சொத்துகளை கொண்டு 3-ஆவது இடத்தில உள்ளார்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*