நான் ரவுடி இல்லை: விசாரணையில் பினு?

கடந்த ஒரு வாரகாலமாக தலைமறைவாக இருந்த ரவுடி பினு அம்பத்தூர் போலீசில் சரணடைந்தார். கடந்த பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதி பூவிருந்தவல்லி அருகில் உள்ள மலையம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் நூற்றுக்கணக்கான ரவுடிகளுடன் பிறந்த நாள் விழா கொண்டாடிய போது போலீசார் சுற்றி வளைத்து கைது செய்ய முயன்ற போது. ரவுடி பினு தப்பினார். ஆனால் பிறந்தநாள் விழாவுக்கு வந்த 75 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்களையும், போலி பத்திரிகையாளர் அட்டைகளையும் கைப்பற்றினார்கள்.
இந்நிலையில், இன்று சரணடைந்த பினுவை காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் அவர், “திருந்தி வாழ்வதற்காகதான் தலைமறைவாக இருந்தேன். கரூரில் இருந்து என் தம்பிதான் இங்கு அழைத்து வந்தான். நான் ரவுடி இல்லை” என தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*