மத்திய அரசை இயக்குவதே ஆர் எஸ் எஸ்தான் :ராகுல் குற்றச்சாட்டு..!

கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி பாஜக மற்றும் பிரதமர் மோடி  மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளைக் கூறினார். மத்திய அரசின் அனைத்து அமைச்சகத்தின் செயலர்களையும் ஆர் எஸ் எஸ் அமைப்புதான் நியமிக்கிறது என்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார். கர்நாடகாவில் தொழில்துறை நிர்வாகிகளிடம் பேசிய ராகுல்காந்தி :-
“ மத்திய அரசை ஆர் எஸ் எஸ் அமைப்புத்தான் இயக்கி வருகிறது. அதன் ஒவ்வொரு துறையிலும் அந்த அமைப்பினர் இடம் பெற்றுள்ளனர். அனைத்து அமைச்சகத்திலும் ஆர் எஸ் எஸ் அமைப்பினர் செல்வாக்கோடு இருக்கிறார்கள். அமைச்சகங்களின் செயலாளர்களை நியமனம் செய்வது ஆர் எஸ் எஸ் அமைப்புதான். நிதி ஆயோக் சுயமான  ஒரு அமைப்பாகும் அந்த அமைப்பிலும் ஆர் எஸ் எஸ் உறுப்பினர்கள் செல்வாக்கோடு உள்ளார்காள். இந்தியாவில் வெளியுறவுக் கொள்கைகளில் ஏராளமான குளறுபடிகள் உள்ளதால் பெரும்பாலான நாடுகள் நட்புடன் இல்லை. இந்தியா தனிமைப்பட்டு வருகிறது” என்றார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*