முதல்வரை சந்தித்த பின் ஸ்டாலின்..!

டிரம்பின் மகனை குறிவைத்துள்ள தீவிரவாதிகள்?

போர் வந்தால் 3 மாதத்தில் தயார் ஆவோம்:ஆர்.எஸ்.எஸ் விளக்கம்…!

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் வைத்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார். அப்போது போக்குவரத்துக் கழகத்தில் செய்ய வேண்டிய மாற்றங்கள் தொடர்பான அறிக்கை ஒன்றை அவரிடம் ஒப்படைத்தர். இச்சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின்:-
“போக்குவரத்து கழகத்தை சீரமைப்பது தொடர்பாக 27 பரிந்துறைகள் அடங்கிய அறிக்கையை முதல்வரிடம் ஒப்படைத்திருக்கிறேன். திமுகவின் இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை அமல்படுத்தினாலே பஸ் கட்டண உயர்வு அவசியமில்லை.அது போல டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை ரத்து செய்யுமாறும் கோரியுள்ளோம். நாங்கள் ஒப்படைத்துள்ள அறிக்கை தொடர்பாக எந்த ஒரு உத்திராவாதமும் அரசுத் தரப்பில் வழங்கப்படவில்லை.
ஊழல் குற்றவாளியான ஜெயலலிதாவின் படம் எந்த அடிப்படையில் சட்டப்பேரவையில் திறக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் சசிகலாவோடு இன்று அவர் சிறையில் இருந்திருப்பார். பிரதமர், ஆளுநர், ஜனாதிபதி என இந்த படத்திறப்பு விழாவுக்கு இவர்கள் அழைப்பு விடுத்தும் கூட இவர்கள் அனைவரும் ஏன் வரவில்லை? என்று கேள்வி எழுப்பினார் ஸ்டாலின்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*