ரவுடி பினு போலீசில் சரண்..!

டிரம்பின் மகனை குறிவைத்துள்ள தீவிரவாதிகள்?

போர் வந்தால் 3 மாதத்தில் தயார் ஆவோம்:ஆர்.எஸ்.எஸ் விளக்கம்…!
கடந்த ஒரு வாரகாலமாக தலைமறைவாக இருந்த ரவுடி பினு அம்பத்தூர் போலீசில் சரணடைந்தார். கடந்த பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதி பூவிருந்தவல்லி அருகில் உள்ள மலையம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் நூற்றுக்கணக்கான ரவுடிகளுடன் பிறந்த நாள் விழா கொண்டாடிய போது போலீசார் சுற்றி வளைத்து கைது செய்ய முயன்ற போது. ரவுடி பினு தப்பினார். ஆனால் பிறந்தநாள் விழாவுக்கு வந்த 75 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்களையும், போலி பத்திரிகையாளர் அட்டைகளையும் கைப்பற்றினார்கள்.
இந்நிலையில், ரவுடி பினு ஒரு வாரகாலமாக தலைமறைவாக இருந்தார். அவரை கைது செய்ய தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில், இன்று அம்பத்தூர் துணை கமிஷனர் முன்னிலையில் ரவுடி பினு சரணடைந்தார். அவரை தங்கள் கஸ்டடியில் எடுத்த போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*