கமலின் திடீர் ஆலோசனைக் கூட்டம்?

காதலர் தினத்தன்று கல்லூரிக்கு வந்தால் நடவடிக்கை..!

நடிகர் கமல்ஹாசன் வருகிற 21-ஆம் தேதி ராமேசுவரத்தில் உள்ள அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து தன் அரசியல் பயணத்தை தொடங்குகிறார். அன்று மாலை
மதுரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இதில், தமிழகம் முழுவதிலும் இருக்கும் ரசிகர்கள் திரள்கின்றனர். அந்த
கூட்டத்தில் கமல்ஹாசன் கட்சி பெயரை அறிவித்து கொள்கை மற்றும் திட்டங்களை வெளியிடுகிறார்.

கட்சியின் தலைவராக கமல்ஹாசன் நியமிக்கப்படுகிறார். பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். ராமநாதபுரம், மதுரை, சிவகங்கையில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். ஏற்கனவே கட்சி பெயர் தேர்வு செய்யப்பட்டு ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது எனவும், கட்சி பெயரை தேர்தல் கமிஷனில் பதிவு செய்வதற்கு தேவையான பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை சட்ட வல்லுனர்களுடன் கலந்து பேசி தயார் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கட்சி பெயரை பதிவு செய்யும் தேதி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

இதில் வழக்கறிஞர் சங்கம் மற்றும் நற்பணி இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். அரசியல் பயணம், பயண திட்டங்கள் மற்றும் கட்சி பெயர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

கேஸ் தட்டுப்பாடு: தொடரும் டேங்கர் லாரிகள் சங்க வேலை நிறுத்தம்?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*