கேஸ் தட்டுப்பாடு: தொடரும் டேங்கர் லாரிகள் சங்க வேலை நிறுத்தம்?

காதலர் தினத்தன்று கல்லூரிக்கு வந்தால் நடவடிக்கை..!

எல்.பி.ஜி டேங்கர் லாரிகள் உறுப்பினர் சங்க வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர மும்பையில் இன்று எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடைபெறவுள்ளது. எண்ணெய் நிறுவனங்களின் புதிய டெண்டர் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து எல்.பி.ஜி டேங்கர் லாரிகள் சங்கத்தின் வேலைநிறுத்தம் மூன்றாவது நாளாக நீடிக்கிறது. இதனால் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தென் மண்டல எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் கீழ் உள்ள 4500 லாரிகள் முடங்கியுள்ளன. வேலை நிறுத்த போராட்டம் காரணமாக லாரி உரிமையாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.2 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. மாநில அளவிலான டெண்டர் முறையை மாற்ற வலியுறுத்தி மேற்குவங்கம், பீகார், ஒடிசா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய கிழக்கு மண்டல எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*