தவறான தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர்

காதலர் தினத்தன்று கல்லூரிக்கு வந்தால் நடவடிக்கை..!

காஷ்மீர் மாநிலம் சஞ்சுவான் ராணுவ முகாமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷி -இமுகமது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.சஞ்சுவான் ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்ட மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்திய வீரர்களில் உயிர் தியாகம் வீணாகாது என்றும் பாகிஸ்தான் தவறுக்கு விலை கொடுக்க நேரிடும் என்றும் எச்சரித்தார்.இந்நிலையில் பாகிஸ்தானும் பதிலுக்கு மிரட்டல் விடுத்துள்ளது

பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் குர்ரம் விடுத்துள்ள அறிக்கையில், “இந்தியா எந்தவொரு தவறான தாக்குதல் தொடுத்தாலும் அதற்கு உரிய பதிலடியை பாகிஸ்தான் தரும். நாட்டை காப்பதற்கு பாகிஸ்தான் படைகள் தயார் நிலையில் உள்ளன. இந்தியா வீண் சண்டைக்கு வந்தால், தவறாக கணித்தால், தவறான தாக்குதலில் ஈடுபட்டால் அதற்கு ஏற்ற பதிலடி கொடுப்போம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

கேஸ் தட்டுப்பாடு: தொடரும் டேங்கர் லாரிகள் சங்க வேலை நிறுத்தம்?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*