பஞ்சாப் நேஷனல் வங்கியின் பங்கு வீழ்ச்சி: 11,360 கோடி முறைகேடான பணப்பரிமாற்றம்?

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் 11,360 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடாக பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  குறிப்பிட்ட வங்கி கிளையில் உள்ள கணக்குகளில் இருந்து வெளிநாட்டில் உள்ள வங்கி கணக்குகளுக்கு அங்கீகரிக்கப்படாத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது.

பணப்பரிமாற்றம் நடைபெற்ற கணக்குகளை வைத்துள்ளவர்களின் பெயர்களை குறிப்பிடாத வங்கி நிர்வாகம் இது தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. வாடிக்கையாளர்கள் விண்ணப்பித்தபடி வெளிநாட்டு கணக்குகளுக்கு பணம் மாற்றப்பட்டுவிட்டதா அல்லது பணத்தை அனுப்பியவர்களுக்கே திருப்பி அனுப்பப்பட்டதா என்ற விவரத்தை வங்கி நிர்வாகம் வெளியிடவில்லை. இது தொடர்பான தகவல்கள் வெளியானதால் மும்பை பங்குச்சந்தையில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*